குடையொன்று மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டு சென்ற குடை தனது உடலில் மோதியதாக கூறி கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் தகராறு ஏற்பட்டு சம்பவம் கைகலப்பாக மாறியது.
இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.