தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குடும்பங்களை ஏமாற்றி நுவரெலியா மாவட்டத்தில் குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வரை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 5 வருடங்களுக்குள் 52,183 பேருக்கு குடும்பக்கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வருடம் ஒன்றுக்கு சராசரியாக 10,403 பேருக்கு குடும்பக்கட்டுப்பாடுகள் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் மேற்கொள்ளப்பகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐந்து வருடங்களில் குடும்பக்கட்டுப்பாடுகளின் எண்ணிக்கை
அதிகரித்து செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2015ஆம் ஆண்டு 7,461ஆக காணப்பட்ட மொத்த குடும்பக்கட்டுபாடுகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 13,590ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களில் குறித்த குடும்ப கட்டுப்பாடுகளின் எண்ணிக்கை 6,129ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.