கண்டியில் கோவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றாளரொருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கண்டியினை சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர்.